Alight Motion's Object/Element Menu, Explained Simply



வீடியோ எடிட்டிங் (Pro-Level Video Editing) பண்றதுக்கு Alight Motion ஆப் எந்த அளவுக்கு ஒரு பவர்புல்லான டூல் அப்படிங்கறது நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும். நம்ம எல்லாரும் சாதாரணமாக இந்த ஆப்ல டெக்ஸ்ட் ஆட் பண்ணுவோம், போட்டோ அல்லது வீடியோ கிளிப்களை ஆட் பண்ணி எடிட் பண்ணுவோம். ஆனா, இந்த ஆப்ல இருக்குற பிளஸ் (+) ஐகானை கிளிக் செஞ்சு "Object / Element" Sectionக்குள்ள போகும்போது அங்கே முக்கியமா 4 ஆப்ஷன்கள் நமக்குக் காட்டும். அது என்னென்னனா—Camera, Null, Empty Group மற்றும் Element/Project.

நிறைய பிகினர்கள் (Beginners) இந்த நாலு ஆப்ஷன்களையும் பார்த்தா, இதெல்லாம் எதுக்குடா இருக்கு? ஏன்னா, இதையெல்லாம் நம்ம டைம்லைன்ல ஆட் பண்ணும்போது சாதாரண போட்டோ அல்லது டெக்ஸ்ட் லேயர் மாதிரி ஸ்கிரீன்ல எந்த ஒரு விசுவல் கன்டென்ட்டையும் காட்டாது. இதனாலயே ஆரம்பத்துல இது ரொம்ப குழப்பமா இருக்குற மாதிரி தோணும் நண்பா. ஆனா, நீங்க ஒரு அட்வான்ஸ் லெவல் எடிட்டர் ஆகணும்னா, இந்த நாலு Toolsயும் பத்தி முழுசா தெரிஞ்சுக்கிறது ரொம்பவே நல்லது. ஒரு Time இதோட உண்மையான பவரை நீங்க புரிஞ்சுக்கிட்டீங்கன்னா, உங்க ப்ராஜெக்ட்டையே டோட்டலா மாத்திரும். இந்த நாலு முக்கியமான டூல்ஸையும் பத்தி ரொம்ப எளிமையா, என் எடிட்டிங் அனுபவத்தோடு சேர்த்து விளக்கமா பாக்கலாமா நண்பா!


1. Camera (3D கேமரா மூவ்மென்ட் மாஸ்டர் கிளாஸ்)

நம்ம முதலா இருக்குற ஆப்ஷன் இந்த "Camera" டூல். இதோட பேரை கேட்டதுமே உங்களுக்கு ஓரளவுக்குப் புரிஞ்சிருக்கும் நினைக்கிற. ஆனா இது ஏதோ சாதாரண கேமரா கிடையாது. இந்த கேமரா லேயரை நீங்க ஆட் பண்ணும்போது, Alight Motion உங்களுக்கு ஒரு விர்ச்சுவல் 3D கேமராவை (Virtual 3D Camera) உங்க ப்ராஜெக்ட் டைம்லைன்ல உருவாக்கித் தரும். இந்த கேமராவை வச்சு உங்க ப்ராஜெக்ட்டோட 3D ஸ்பேஸ்க்குள்ள (3D Space) நீங்க எப்படி வேணாலும் டிராவல் பண்ணலாம்.

உதாரணத்துக்கு, கேமராவை சப்ஜெக்ட்டுக்கு முன்னாடி கொண்டு போகலாம் (Push In), பின்னாடி இழுக்கலாம் (Pull Back), இடது பக்கத்துல இருந்து வலது பக்கத்துக்கு ஸ்மூத்தா நகர்த்தலாம் (Pan), மேல அல்லது கீழ வளைக்கலாம் (Tilt), இல்ல உங்க சப்ஜெக்ட்டை சுத்தி ஒரு வட்டப் பாதையில சுழல வைக்கலாம் (Orbit Shot).

இந்த கேமரா லேயர் இல்லாம நீங்க ஒரு வீடியோ பண்றீங்கன்னா, ஒவ்வொரு போட்டோ மற்றும் டெக்ஸ்ட் லேயருக்கும் தனித்தனியா பொசிஷன் Keyframe வச்சு நகர்த்த வேண்டியிருக்கும். அப்படி பண்ணும்போது அந்த சினிமாட்டிக் லுக் (Cinematic Look) உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது, வீடியோ பாக்க ரொம்ப பிளாட்டா (Flat) இருக்கும்.

ஆனா, இந்த கேமரா லேயரை ஆட் பண்ணிட்டு, உங்க மத்த லேயர்களை எல்லாம் 3D மோடுக்கு (Switch to 3D mode) மாத்திட்டீங்கன்னா போதும்! ஸ்கிரீன்ல ஒரு சூப்பரான Parallax Depth எஃபெக்ட் உருவாகும். Reels எல்லாம் எழுத்துக்களைத் தாண்டி கேமரா பறந்து போற மாதிரி மாஸான எடிட்ஸ் பாத்திருப்பீங்கல்ல, அது எல்லாமே இந்த கேமரா லேயரை வச்சுதான் பண்றாங்க. இது உங்க எடிட்டிங்கை ஒரு சாதாரண லெவல்ல இருந்து ப்ரொபஷனல் தியேட்டர் லுக்குக்கு மாத்திடும்.


2. Null (மறைமுக மாஸ்டர் கண்ட்ரோலர்)

நம்ம ரெண்டாவதா இருக்குற டூல் "Null" ஆகும். இந்த நல் லேயரை நீங்க அப்ளை பண்ணும்போது ஸ்கிரீன்ல சும்மா ஒரு வெற்று லேயரா தான் இருக்கும். எக்ஸ்போர்ட் பண்ணும்போது இந்த லேயர் வீடியோல கண்ணுக்கே தெரியாது. ஆரம்பத்துல பாக்குறதுக்கு இது வேஸ்ட் மாதிரி தெரிஞ்சாலும், ஒருவாட்டி இதோட ட்ரிக்கை நீங்க கத்துக்கிட்டீங்கன்னா, இது இல்லாம உங்களால பெரிய ப்ராஜெக்ட்களை எடிட் பண்ணவே முடியாது என் அனுபவத்துல சொல்ற.

இதோட முக்கிய வேலை என்னன்னா, இது பல லேயர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வச்சுக்கக்கூடிய ஒரு "Parent Handle" அல்லது மாஸ்டர் கண்ட்ரோலராக வேலை செய்யும். உதாரணத்துக்கு, உங்க எடிட்டிங் ஸ்கிரீன்ல ஒரு அஞ்சு வெவ்வேறு டெக்ஸ்ட் லேயர்களோ அல்லது சின்ன சின்ன போட்டோ லேயர்களோ இருக்குன்னு வச்சுப்போம். இந்த அஞ்சு லேயரையும் ஒரே நேரத்துல, ஒரே வேகத்துல நீங்க நகர்த்தணும், ஜூம் பண்ணனும் அல்லது ரொட்டேட் பண்ணனும்னு நினைக்கிறீங்க. இப்போ Null லேயர் இல்லைனா நீங்க என்ன பண்ணுவீங்க? அஞ்சு லேயருக்கும் தனித்தனியா அஞ்சு வாட்டி Keyframe வைப்பீங்க. அப்படி வைக்கும்போது கண்டிப்பா ஏதாச்சும் ஒரு லேயரோட டைமிங் மிஸ் ஆகி எடிட்டே சொதப்பிடும்.

ஆனா, இந்த நல் (Null Object) லேயரை ஆட் பண்ணிட்டு, உங்க மத்த அஞ்சு லேயரையும் இந்த நல் லேயரோட "Parenting Tool" மூலமா லிங்க் பண்ணிட்டீங்கன்னா போதும். இப்போ நீங்க அந்த அஞ்சு லேயரையும் தொடவே தேவையில்லை, இந்த ஒரே ஒரு Null லேயருக்கு மட்டும் ஒருமுறை Keyframe வச்சு நகர்த்தினாலோ அல்லது ஜூம் பண்ணினாலோ, அதோட லிங்க் ஆகிருக்க மத்த அஞ்சு லேயரும் அதை அப்படியே காப்பி பண்ணி ஒண்ணா நகரும். இது உங்க டைம ரொம்ப மிச்சம் படுத்தும், டைம்லைன்ல தேவையில்லாத Keyframes சேராம கிளீனா வச்சுக்க உதவும் நண்பா.


3. Empty Group (ப்ராஜெக்ட் ஆர்கனைசர் மற்றும் குரூப் மாஸ்க்)

மூன்றாவதா இருக்குற "Empty Group". இந்த டூல் உங்க வீடியோவுக்கு எந்த ஒரு புது விசுவல் எஃபெக்ட்டையும் தராது. ஆனா இதோட முழு முதற் காரணியே உங்க ப்ராஜெக்ட் டைம்லைனை ரொம்ப சுத்தமாவும் ஆர்கனைஸ்டாகவும் (Organized Timeline) வச்சுக்கிறது தான்.

இதை நீங்க உங்க கம்ப்யூட்டர் அல்லது மொபைல்ல இருக்குற ஒரு "Folder" மாதிரி நினைச்சுக்கலாம். ஒரு பெரிய ப்ராஜெக்ட் பண்ணும்போது ஏகப்பட்ட லேயர்கள் சேர்ந்துடும். அப்போ நமக்கு எந்த லேயர் என்ன வேலை செய்யுதுன்னே குழம்பிடும். அந்த சூழ்நிலையைத் தவிர்க்க இந்த எம்டி குரூப் உதவும். உங்களோட லிரிக்ஸ் டெக்ஸ்ட் லேயர்கள் எல்லாத்தையும் தூக்கி ஒரு குரூப் ஃபோல்டர்க்குள்ளயும், பேக்கிரவுண்ட் எலிமென்ட்ஸ் எல்லாத்தையும் தூக்கி இன்னொரு ஃபோல்டர்க்குள்ளயும் போட்டு வச்சுக்கலாம்.

இதனால என்ன பெரிய நன்மை னா, இப்போ நீங்க அந்த குரூப் பண்ண அத்தனை லேயர்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு எஃபெக்ட்டையோ, ஒரு மாஸ்க் எஃபெக்ட்டையோ (Mask Effect) அல்லது ஒரு ட்ரான்ஸ்ஃபார்ம் மூவ்மென்ட்டையோ ஒரே கிளிக்கில் அப்ளை பண்ணிடலாம். தனித்தனி லேயரா போயிட்டு ஒரே எஃபெக்ட்டை அஞ்சு வாட்டி ஆட் பண்ணி டைம் வேஸ்ட் பண்ண தேவையில்லை. ப்ராஜெக்ட் File ஓபன் பண்ணி பார்த்தா அலைன்மென்ட் சும்மா அச்சுப்பிசகாம கிளீனா இருக்கும்.


4. Element / Project (நெஸ்டிங் மற்றும் ரீயூஸபிள் டூல்)

கடைசியா இருக்குற மிக முக்கியமான அட்வான்ஸ் ஆப்ஷன் இந்த "Element / Project" ஆகும். எடிட்டிங் உலகத்துல இதை "Nesting" (நெஸ்டிங்) அப்படின்னு சொல்லுவாங்க. இதோட சிம்பிள் லாஜிக் என்னன்னா, நீங்க ஏற்கனவே பண்ணி வச்சிருக்க ஒரு முழு ப்ராஜெக்ட்டையோ அல்லது ஒரு காம்போசிஷனையோ உங்களோட தற்போதைய புதிய ப்ராஜெக்ட்டுக்குள்ள ஒரே ஒரு சிங்கிள் லேயரா (Single Layer) இம்போர்ட் பண்ணி பயன்படுத்திக்கலாம்.

உதாரணத்துக்கு, நீங்க உங்க Vetri Veo வீடியோக்களுக்கு முன்னாடி போடுற ஒரு Intro Video அல்லது அனிமேஷன் லோகோவை ரெடி பண்ணி வச்சிருக்கீங்கன்னு வச்சுப்போம். ஒவ்வொரு வாட்டியும் புது வீடியோ எடிட் பண்ணும்போது அந்த இண்ட்ரோவை ஃபர்ஸ்ட்ல இருந்து லேயர் லேயரா உருவாக்கினா எவ்வளவு கடுப்பா இருக்கும்?

அதுக்கு பதிலா, அந்த இண்ட்ரோவை ஒரு தனி ப்ராஜெக்ட்டா பண்ணி சேவ் பண்ணிட்டு, இந்த எலிமென்ட் ஆப்ஷன் மூலமா நீங்க பண்ற எந்த ஒரு புது ப்ராஜெக்ட்டுக்குள்ளயும் ஒரே கிளிக்கில் ஒரு ரீயூஸபிள் எலிமென்ட்டா (Reusable Element) உள்ள கொண்டு வந்திடலாம். இன்னும் சூப்பரான விஷயம் என்னன்னா, நீங்க அந்த மெயின் இண்ட்ரோ ப்ராஜெக்ட்ல ஏதாச்சும் ஒரு சின்ன கலரையோ அல்லது பேரையோ மாத்தினா, இந்த எலிமென்ட் டூல் மூலமா அதை எந்தெந்த வீடியோ ப்ராஜெக்ட்ல எல்லாம் லிங்க் பண்ணி வச்சிருக்கீங்களோ, அங்க எல்லாமே அது ஆட்டோமேட்டிக்கா அப்டேட் ஆகிடும்! இது அட்வான்ஸ் எடிட்டர்களுக்கு ஒரு மிகப்பெரிய டைம்-சேவர் (Time Saver).


பிகினர்கள் செய்யும் பொதுவான தவறுகள்:

• கேமரா ஸ்விட்ச் ஆன் செய்யாமல் இருப்பது: கேமரா லேயரைச் சேர்த்தாலும் வியூ ஸ்விட்சை இயக்க மறப்பது.

• Parenting லிங்க் பிழைகள்: நல் லேயருடன் மற்ற லேயர்களைத் தவறாக இணைத்தல்.

• குரூப் குழப்பங்கள்: எம்டி குரூப்பில் தேவையற்ற லேயர்களைச் சேர்ப்பது.

PRESET

IMPORT 

XML FILE

Post a Comment

Previous Post Next Post