Slow Motion Beat Video Editing Tamil

                             

Edit பார்க்குறவங்களை அப்படியே ஸ்க்ரோல் செய்யாமல் கட்டிப்போடுற மாதிரியும் இருக்குற ஒரு Massன எடிட்டிங் ஸ்டைல பத்திதான் பாக்க போறோம். அதுதான் இந்த Cinematic Slow Motion Beat Editing. இந்த மாதிரி smooth movement, cinematic look, மற்றும் Song தாளத்திற்கு ஏத்த மாதிரி edits-களைத்தான் ரொம்பவே Trending ஆகுது. நண்பா, இந்த எடிட்டிங் பாக்குறதுக்கு ரொம்ப ரிச்சாகவும், ஒரு cinematic feel-ஐ நமக்குத் தரும். Beginnersயா இருக்குறவங்களுக்கு ஆரம்பத்துல இந்த velocity graph செட் பண்றதும், music beat-திற்கு ஏத்த மாதிரி வீடியோவை கட் பண்ணி keyframes வைக்கிறதும் கொஞ்சம் கஷ்டமா தெரியலாம். ஆனா நீங்க கவலைப்படவே வேண்டாம்! என்னோட 4 வருட எடிட்டிங் அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட ரகசிய Adjustmentகளோடு, ஒரு நண்பனா நா உங்களுக்கு சொல்லித் தாரேன். நான் சொல்லும் ஒவ்வொரு settings மற்றும் keyframe மதிப்புகளையும் கவனமாக ஃபாலோ பண்ணுங்க, நீங்களும் உங்க மொபைல்லயே இந்த மாஸ் எடிட்டை பண்ணிடலாம்! நண்பா.


High-Quality Video Clips and Audio: உயர்தரமான வீடியோ கிளிப்கள் மற்றும் ஆடியோவைத் தேர்வு செய்தல்

ஒரு professional slow motion வீடியோவை உருவாக்குவதற்கு நாம எடுக்குற வீடியோ கிளிப்போட ஒரிஜினல் தரம் (Footage Quality) ரொம்பவே முக்கியம் நண்பா. நீங்க எப்போதுமே உங்க எடிட்டிங்க்கு 60fps (Frames Per Second) அல்லது அதுக்கும் அதிகமான பிரேம் ரேட் இருக்குற வீடியோ கிளிப்களை மட்டுமே பயன்படுத்துங்க. ஏன்னா, 30fps வீடியோவை நீங்க Slow பண்ணும்போது வீடியோ ஆங்காங்கே உடைந்தோ அல்லது lag ஆகியோ வரலாம். ஆனா 60fps வீடியோக்களை Alight Motion-ல Slow பண்ணும்போது, அது சும்மா வெண்ணெய் மாதிரி ரொம்ப ஸ்மூத்தான cinematic slow motion-ஐ நமக்குக் கொடுக்கும். Car Edits, Travel Shorts, அல்லது Short Flim கிளிப்கள் என எதை எடுத்தாலும் நல்ல high-quality கிளிப்களா எடுத்துக்கோங்க.

Video கிளிப்பைத் தேர்ந்தெடுத்ததுக்கு அப்புறம், இந்த எடிட்டிங்கோட அடுத்த முக்கிய உயிர்நாடியே ஆடியோ (Audio Track) தான் நண்பா. இந்த velocity editing-கு எப்போதுமே மெதுவான மெலடி பாடல்கள், heavy bass இருக்குற மியூசிக், Phonk Tracks அல்லது மாஸான Motivational டயலாக்குகளைப் பயன்படுத்துவதுதான் ரொம்பவே நல்லா இருக்கும். ஆடியோவை Projectல ஆட் பண்ணிட்டு, பாட்டை நல்லா கேட்டு, அந்த Bass Drop அல்லது டிரம்ஸ் சத்தம் வர்ற கரெக்டான மில்லிசெகண்ட் இடங்களை Note பண்ணி டைம்லைன்ல Red Bookmark வச்சுக்கோங்க. இந்த புக்மார்க் புள்ளிகள் தான் நம்ம effects மற்றும் ஸ்பீடு மாற்றங்களைச் செய்யப் போறோம் சரியா.


Graph Editor and Velocity Editing Techniques: கிராஃப் எடிட்டரை மாஸ்டர் செய்தல் மற்றும் வெலாசிட்டி எடிட்டிங் முறை

இப்போ Alight Motion டைம்லைன்ல உங்க வீடியோ கிளிப்பை செலக்ட் பண்ணி, Speed கண்ட்ரோல் ஆப்ஷனுக்குள்ள போங்க. நாம சும்மா நார்மலா ஸ்பீடை குறைக்கக் கூடாது நண்பா. மியூசிக்ல எப்போதெல்லாம் அமைதியான இசை வருதோ, அப்போதெல்லாம் ஸ்பீடை கம்மி பண்ணனும் (Slow Motion), எப்போதெல்லாம் டிரம்ஸ் அல்லது பேஸ் சத்தம் பலமாக அடிக்குதோ, அப்போதெல்லாம் Speed டக்குனு அதிகமாக்கணும் (Fast Velocity). இந்த மாற்றங்களைச் செய்ய டைம்லைன்ல keyframes-களைப் பயன்படுத்தணும்.

Keyframes-களை வச்சதுக்கு அப்புறம், Alight Motion-ஓட ஸ்பீடு கிராஃப் Toolலை (Graph Editor) ஓபன் பண்ணுங்க. இந்த கிராஃப் தான் நம்ம வீடியோவோட அசைவை ரோபோடிக் மாதிரி இல்லாம, ரொம்பவே இயற்கையான cinematic movement-ஆ மாத்தப்போற Tool நண்பா. கிராஃப் லைனை வளைத்து "Ease In-Out" வடிவத்துல செட் பண்ணிக்கோங்க. இப்படி பண்ணும்போது ஒரு விநாடியில வீடியோ பயங்கர ஸ்பீடாவும், அடுத்த விநாடியில அப்படியே ஸ்மூத்தா Slow மோஷனுக்கும் மாறும். இந்த speed ramping எஃபெக்ட் பாக்குறதுக்கு செமையா இருக்கும்.


Motion Blur and Cinematic Shake Effects Setup: மோஷன் பிளர் மற்றும் சினிமாட்டிக் ஷேக் எஃபெக்ட்ஸ் செட்டப்

Video பயங்கர Speeda மாறி டக்குனு Slow மோஷனுக்கு வரும்போது, அந்த இடத்துல ஒரு நிஜமான கேமரா மூவ்மென்ட் லுக் கிடைக்கிறதுக்கு நாம கண்டிப்பாக Motion Blur Effect Add பண்ணனும். Alight Motion Effects பேனல்ல Blurல 'Motion Blur' ஆட் பண்ணி, அதோட intensity அளவை உங்க வீடியோவுக்கு ஏத்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. இந்த மோஷன் பிளர், வீடியோ வேகமாக நகரும்போது ஒரு அழகான cinematic blur-ஐ உருவாக்கி, visuals-ஐ ரொம்பவே ஸ்மூத்தாக மாற்றும்.

இதுகூடவே வீடியோ இன்னும் பவர்புல்லா இருக்க, பீட் ட்ராப் ஆகுற அந்த கரெக்டான சிவப்பு புக்மார்க் புள்ளிகள்ல ஒரு குட்டி Cinematic Shake Effect அல்லது 'Directional Blur' எஃபெக்ட்டை ஆட் பண்ணனும் நண்பா. பாட்டுல Bass அடிக்கும்போது Screen லேசா அதிருற மாதிரி (Screen Punch) keyframe வச்சீங்கன்னா, வீடியோவோட எனர்ஜி சும்மா வேற லெவல்ல இருக்கும்.


Color Grading and Glow Overlay Effects: கலர் கிரேடிங், க்ளோ ஓவர்லே எஃபெக்ட்ஸ்

ஒரு வீடியோவை சாதாரண மொபைல் எடிட்ல இருந்து cinema லெவலுக்கு மாத்துறதே இந்த கலர் Color Grading தான் நண்பா. உங்க வீடியோ கலரையே அப்படியே விடாம, அதுக்கு மேல ஒரு Adjustment Layer ஆட் பண்ணி, Brightness, Contrast, Saturation மற்றும் Shadow Depth போன்ற Add பண்ணி Adjust பண்ணுங்க. இப்போ ட்ரெண்டிங்ல இருக்குற டார்க் சினிமாட்டிக் அவுட்லுக் (Dark Aesthetic Filter) அல்லது டீல் அண்ட் ஆரஞ்சு (Teal-Orange) கலர் டோனை செட் பண்ணீங்கன்னா வீடியோ பாக்க ரொம்பவே நல்லா இருக்கும்.

கலரிங் முடிஞ்சதும், இந்த எடிட்டிங்கோட அடுத்த முக்கிய பகுதி Glow Visual Effects மற்றும் ஓவர்லே Effectsகள் (Cinematic Overlays) ஆகும். கேரக்டரோட கண்கள்ல ஒரு எலக்ட்ரிக் க்ளோ குடுக்குறது (Glowing Eyes), பேக்கிரவுண்ட்ல நியான் ரிஃப்ளெக்ஷன்ஸ் வைப்பது போன்ற விஷயங்கள் Reels-ஓட முதல் ஒரு செகண்ட்லயே பார்க்குறவங்கள அப்படியே கவர்ந்து இழுத்திடும். இதுகூடவே, திரையில் மெதுவாக மிதக்கும் புகை டெக்ஸ்சர்கள் (Smoke Overlays), பனித்துளிகள் (Snow Particles), லென்ஸ் ஃப்ளாரின்கள் (Lens Flares) அல்லது cinemaடிக் பிளாக் பார்களை (Cinematic Black Bars) மேலேயும் கீழேயும் வைக்கும்போது, உங்க வீடியோ சும்மா ஒரு தியேட்டர்ல படம் பாக்குற மாதிரியான பிரம்மாண்டமான Lookயே தரும்.


Typography & Preset Files: டைப்போகிராபி மற்றும் பிரசெட் ஃபைல்கள்

வீடியோ கதையை அல்லது லவ் ஃபீலை பண்றவங்களுக்கு இன்னும் ஆழமாகக் கொண்டு சேர்க்க, நாம இதுல அழகான வரிகளை (Typography) ஆட் பண்ணனும் நண்பா. பாட்டோட வரிகளுக்கு ஏத்த மாதிரி நல்ல ஸ்டைலிஷ் Fonfகளைப் பயன்படுத்தி, அதுக்கும் லேசான Glow மற்றும் Smooth keyframe மூவ்மென்ட் கொடுத்தீங்கன்னா, எழுத்துக்கள் திரையில ரொம்பவே நேர்த்தியா வந்து போகும். எழுத்துக்கள் சும்மா வராம, பீட் அடிக்கும்போது லேசா பாப்-அப் ஆகுற மாதிரி அனிமேஷன் பண்ணுங்க, அது பாக்குறதுக்கு ரொம்பவே நல்லா இருக்கும்.

Alight Motion எடிட்டிங் கம்யூனிட்டில இப்போ பிரசெட் கல்ச்சர் ரொம்பவே பெருசா இருக்கு நண்பா. நம்ம Vetri Veo தளம் மூலமா பிகினர்களுக்காக நிறைய XML Presets, Graph Presets, Cinematic, Lyrical Effects, நாம இலவசமா கொடுக்கிற. புதுசா எடிட் பண்ணிறவங்க இந்த Presetகளை ஒரே கிளிக்கில் இம்போர்ட் செஞ்சு Edit பண்ணலாம். ஆனா, ஒரு உண்மையான எடிட்டரா இருக்கணும்னா, அந்த பிரசெட்டை அப்படியே காப்பி-பேஸ்ட் பண்ணாம, அதுல உங்களுடைய சொந்த Effects, கஸ்டம் டைமிங் மற்றும் கலர் டோன்களை மாத்தி ஒரு யூனிக்கான எடிட்டிங் ஸ்டைலை உருவாக்க பழகிக்கோ.


Export Quality Optimization & Algorithm Secrets: எக்ஸ்போர்ட் குவாலிட்டி ஆப்டிமைசேஷன் மற்றும் அல்காரிதம் ரகசியங்கள்

இப்போ நாம மிக முக்கியமான இறுதி கட்டத்திற்கு வந்துட்டோம் நண்பா. நாம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு அனிமேஷன்களையும், ஸ்லோ மோஷன் எஃபெக்ட்களையும் மொபைலில் உருவாக்கினாலும், அதைச் சரியாக Export செய்யவில்லை என்றால் எல்லாமே வீணாகிவிடும். இதனால் Instagram அல்லது YouTube தளங்களில் அப்லோடு செய்தவுடன், அவற்றின் Compression காரணமாக வீடியோவின் ஷார்ப்னஸ் மற்றும் மோஷன் ஸ்மூத்னஸ் முற்றிலும் குறைந்து மங்கலாக மாறிவிடும்.

இப்படி வராமல் இருக்கணும்னா, கிரியேட்டர்கள் எப்போதுமே தங்களது Reels எக்ஸ்போர்ட் செய்யும்போது உகந்த Balanced Bitrate மற்றும் அதிகப்படியான பிரேம் ரேட் ஆகியவற்றைத் தான் பயன்படுத்துகிறார்கள். Alight Motion Export பேனலில் வீடியோ செட்டிங்ஸை 1080p Full HD அல்லது 4K-வில் வைத்து, பிரேம் ரேட் 60fps ஆகவும், வைத்து எக்ஸ்போர்ட் செய்ய வேண்டும். இது அப்லோடுக்கு பிறகும் உங்க வீடியோவின் தரத்தைக் குறையாமல் வச்சுக்க உதவும்.


PRESET

IMPORT

XML FILE

CLICK

FONTS

CLICK


1 Comments

Previous Post Next Post