இன்றைக்கு இருக்கும் மொபைல் வீடியோ எடிட்டிங் உலகில், ஆரம்பத்தில் எடிட் செய்யப் பழகும் பெரும்பாலான கிரியேட்டர்கள் தங்களது எடிட்டிங் பயணத்தை CapCut ஆப் மூலமாகத்தான் தொடங்குவார்கள். அது பயன்படுத்த மிகவும் எளிமையாக இருந்தாலும், உங்களது வீடியோக்கள் இன்னும் கொஞ்சம் ஸ்மூத்தாகவும், அட்வான்ஸ்டு சினிமாட்டிக் அனிமேஷன்களுடனும் வர வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் போதுதான், கேப்கட்டின் எல்லைகள் உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். அந்த ஒரு கட்டத்தில் தான் நாம் மொபைல் எடிட்டிங்கின் லெஜண்ட் என்று சொல்லப்படும் அலைட் மோஷன் (Alight Motion) ஆப் பக்கமே வர வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் இந்த ஆப்பை ஓபன் செய்யும்போது இதன் இன்டர்ஃபேஸ் கொஞ்சம் கடினமாகவும், குழப்பமாகவும் இருப்பது போலத் தோன்றுவது முற்றிலும் இயல்பான ஒன்றுதான் நண்பா. ஆனால், ஒரு சில நாட்கள் மட்டும் இந்த ஆப்பைத் தொடர்ந்து பயன்படுத்திப் பழகிவிட்டால், இதன் கீபிரேம்கள் மற்றும் கிராஃப் கண்ட்ரோல்களின் அசாத்தியமான பவர் உங்களுக்குப் புரிந்துவிடும். என்னுடைய 4 வருட எடிட்டிங் அனுபவத்தை வைத்து நீங்கள் எப்படி Capcut இருந்து Alight Motionக்கு ஒரு ப்ரோ-லெவல் எடிட்டராக மாற (A to Z) வழிகளை மிகவும் எளிமையா சொல்றேன்.
Alight Motion Home Screen & Project Setup Secrets: அலைட் மோஷன் ஹோம் ஸ்கிரீன் மற்றும் ப்ராஜெக்ட் செட்டப் ரகசியங்கள்
நண்பா, நீங்கள் அலைட் மோஷன் அப்ளிகேஷனை முதல் முதலாக ஓபன் செய்யும்போது அதன் Home Screenனைப் பார்த்து எதற்கும் பயப்பட வேண்டாம். அங்கே முதலாவதாக ஒரு 'Tutorials' செக்ஷன் இருக்கும், அதில் இருக்கும் பேசிக் வீடியோக்களைப் பார்த்தாலே App எப்படி கையாள்வது என்று ஓரளவிற்கு உங்களுக்குப் புரியும். அதற்கு கீழே உங்களது 'Projects' அனைத்தும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்பின் ஒரு ஆகச்சிறந்த அம்சம் என்னவென்றால், இதில் 'Autosave' வசதி இருக்கிறது. அதாவது, நீங்கள் எடிட் செய்து கொண்டிருக்கும் போது தற்செயலாக மொபைல் Off ஆனாலோ அல்லது Offscreen ஆனாலோ, உங்களது உழைப்பு வீணாகாமல் அப்படியே ப்ராஜெக்ட் செக்ஷனில் பத்திரமாகச் சேமிக்கப்பட்டிருக்கும். இதற்குப் பக்கத்திலேயே 'Templates' என்ற ஆப்ஷன் இருக்கும், அங்குதான் நாம் மற்றவர்களிடம் இருந்து வாங்கும் Presets அனைத்தும் வந்து உட்காரும் நண்பா.
இப்போது ஒரு புதிய ப்ராஜெக்ட்டைத் தொடங்குவதற்கு, கீழே இருக்கும் அந்த கிரீன் கலர் பிளஸ் (+) ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும். Instagram Reels அல்லது YouTube Shorts வீடியோக்களுக்கு 9:16 Aspect Ratio செலக்ட் செய்து கொள்ளுங்கள். ரெசல்யூஷனை எப்போதுமே 1080p Full HD அல்லது 4K-விலும், பிரேம் ரேட்டை 60fps-லும் வச்சுக்கோங்க. பேக்கிரவுண்ட் நிறத்தை மேக்ஸிமம் பிளாக் (Black Background) செட் பண்ணிட்டு, ப்ராஜெக்ட்டை உருவாக்குவதற்கு முன்னால் அதற்கு ஒரு கஸ்டம் பெயர் (Name Project) வைக்க பழகுங்கள். பெயர் வைக்காமல் விட்டால், டைம்லைன்ல எல்லாமே "Untitled" என்று வந்து உட்கார்ந்து, பின்னர் எந்த ப்ராஜெக்ட் எதற்கு என்று நமக்குக் கண்டுபிடிக்க குழப்பமா இருக்கும்.
Text, Shapes & Basic Cut Tools: டெக்ஸ்ட், ஷேப்கள் மற்றும் பேசிக் கட் டூல்ஸ்களை கையாளும் முறை
Projectகுள் நுழைந்தவுடன், அங்கே கீழே இருக்கும் பிளஸ் + ஐகானைத் தொட்டால் Shape, Media, Audio, object Element, Template, Text, freehand drawing மற்றும் vector drawing போன்ற ஏகப்பட்ட ஆப்ஷன்கள் காட்டும் நண்பா. டெக்ஸ்ட் ஆட் செய்வது இதில் மிகவும் சிம்பிள். Text டூலை எடுத்து உங்களுக்குத் தேவையான வரிகளை டைப் செய்துவிட்டு, அதன் ஃபான்ட் ஸ்டைல், சைஸ், அலைன்மென்ட் மற்றும் கலர்களை உங்களது வீடியோவின் மூடைப் பொறுத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஆனால், இதில் இருக்கும் ஷேப்களைப் (Shapes) பயன்படுத்துவதுதான் ஆரம்பத்தில் பிகினர்களுக்கு கொஞ்சம் பழக டைம் எடுக்கும். ஒரு ஷேப்பை டைம்லைனில் ஆட் செய்தவுடன், கீழே நமக்கு ஒரு புதிய டூல் பார் ஓபன் ஆகும் நண்பா.
அதில் முதலாவதாக இருப்பது 'Cut Tools' ஆகும். இதில் மொத்தம் மூன்று iconகள் இருக்கும். முதலாவது ஐகான், நீங்கள் இருக்கும் Playhead இடது பக்கத்தில் இருக்கும் தேவையில்லாத பகுதிகளை மொத்தமாக நீக்கிவிடும். இரண்டாவது ஐகான், பிளேஹெட்டிற்கு வலது பக்கத்தில் இருக்கும் பகுதிகளை நீக்கிவிடும். நடுவில் இருக்கும் மூன்றாவது ஐகான் தான் Split Tool ஆகும், இது வீடியோ கிளிப்பை எந்தப் பகுதியும் அழியாமல் நடுவில் மட்டும் இரண்டாக உடைக்கும். எடிட்டிங்கில் நாம் அதிகமாகப் பயன்படுத்துவது இந்த Speed டூலை மட்டும்தான் நண்பா. இதற்குப் பக்கத்திலேயே Speed Control, கலர் அண்ட் கிரேடியன்ட், பார்டர் அண்ட் ஷேடோ மற்றும் ஒபாசிட்டி ஸ்லைடர்கள் இருக்கும். வடிவங்களின் அளவை குத்துமதிப்பாக மாற்றாமல் துல்லியமாக மாற்ற 'Shape Adjustments' டூலுக்குள் சென்று எண்களை டைப் செய்து மாற்றிக் கொள்ளலாம் நண்பா.
Effects Categories & Keyframe Animation Masterclass: எஃபெக்ட்ஸ் கேட்டகிரி மற்றும் கீபிரேம் அனிமேஷன் மாஸ்டர் கிளாஸ்
நண்பா, Capcutடை விட Alight Motion ஏன் பல மடங்கு பவர்புல்லான ஆப் சொல்றேன்னா. இந்த ஆப்பில் எஃபெக்ட்ஸ்கள் அனைத்தும் கலர், 3D, மூவ் அண்ட் டிரான்ஸ்ஃபார்ம், அனிமேஷன் எனத் தனித்தனி பிரிவுகளாக Categories பிரிக்கப்பட்டிருக்கும். இதனால் நமக்குத் தேவையான எஃபெக்ட்டை நாம் தேடாமல் ரொம்பவே ஃபாஸ்ட்டா கண்டுபிடிச்சிடலாம். ஒருவேளை நீங்கள் ஆட் செய்த எஃபெக்ட் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதை அப்படியே லேசாக ஸ்வைப் செய்து டைம்லைனில் இருந்து நீக்கிவிடலாம். மேலும், ஒரு எஃபெக்ட்டை நீக்காமல் தற்காலிகமாக மறைத்து வைக்க அங்கே இருக்கும் கண் ஐகானை (Eye Icon) ஆஃப் செய்து வச்சுக்கலாம் நண்பா. இது ரீ-ஒர்க் பண்ற டைமை ரொம்பவே மிச்சம் பண்ணும்.
இதற்கடுத்த ஆகச்சிறந்த அம்சம் என்னவென்றால், அது 'Keyframe Animation' சிஸ்டம். கேப்கட்டில் இருக்கும் கீபிரேம்கள் ரொம்பவே லிமிட்டடான மூவ்மென்ட்டை தான் தரும், விசுவல்ஸ் பார்க்க ரொம்ப மெக்கானிக்கலாக இருக்கும். ஆனால், அலைட் மோஷனில் நீங்கள் வைக்கும் இரண்டு கீபிரேம்களுக்கு நடுவே உங்களது வீடியோவின் வேகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை 'Graph Editor' மூலமாக அணுவணுவாக உங்களால் கட்டுப்படுத்த முடியும். வேவ்ஃபார்மிற்கு ஏத்த மாதிரி அசைவுகளை ஸ்மூத்தாக மாற்ற Move & Transform டூலில் கீபிரேம் வச்சு, கிராஃப் கர்வை 'Ease In-Out' வடிவத்தில் செட் பண்ண பழகிக்கோங்க நண்பா. இந்த ஒரு கீபிரேம் கிராஃப் மேஜிக் தான், உங்களது வீடியோவை ஒரு சாதாரண மொபைல் எடிட்டில் இருந்து ப்ரோ-லெவல் எடிட்டிங்கிற்கு மாத்தும்.
Super Shortcuts to Cut Editing Time in Half: எடிட்டிங் நேரத்தை பாதியாகக் குறைக்கும் சூப்பர் ஷார்ட்கட்டுகள்
நண்பா, அலைட் மோஷனில் பெரிய ப்ராஜெக்ட்களை எடிட் செய்யும்போது நமக்கு நிறைய டைம் வேஸ்ட் ஆகும். அதைத் தவிர்க்க இந்த ஆப்பில் இருக்கும் சில ரகசிய shortcutகளை நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். டைம்லைனில் ஒரு குட்டி கிளிப்பும், ஒரு பெரிய கிளிப்பும் இருக்கும்போது, அந்தச் சிறிய கிளிப்பை இழுக்காமல் Playhead இருக்கும் இடத்திற்கு உடனடியாகக் கொண்டு வந்து பொருத்த ஒரு பிரத்தியேகமான Snap icon ஐகான் அங்கே குடுத்துகோ.
அதேபோல, ஒரு கிளிப்பின் கால அளவை மட்டும் அப்படியே Extand இருக்கும் இடம் வரை நீட்டிக்க பக்கத்திலேயே ஒரு தனி எக்ஸ்டெண்ட் ஐகானும் இருக்கு. டைம்லைனில் இருக்கும் Arrow Icons நீங்கள் கிளிக் செய்யும்போது, உங்களது பிளேஹெட் ஆட்டோமேட்டிக்கா அந்த லேயரோட முதல் பிரேமிற்கும் அல்லது கடைசி பிரேமிற்கும் டக்கு டக்குனு ஜம்ப் ஆகிவிடும். இது கிளிப்களுக்கு நடுவே தேவையில்லாத கருப்பு கேப்புகள் விழுவதைத் தடுத்து வீடியோவை கிளீனா வச்சுக்க உதவும் நண்பா. இந்த ஆப்பில் Capcut மாதிரி ஆட்டோமேட்டிக் பீட் டிடெக்ஷன் கிடையாது. பாடலைக் கேட்டு உங்களது கைகளாலேயே டைம்லைனைத் தொட்டு ரெட் புக்மார்க்குகளை அடையாளப்படுத்த பழகிகோ.
Layer Management & Advanced Masking Techniques: லேயர் மேனேஜ்மென்ட் மற்றும் அட்வான்ஸ்டு மாஸ்கிங் முறைகள்
நீங்கள் Alight Motionனில் நிறைய லேயர்களை அள்ளிப் பயன்படுத்தும்போது உங்களது மொபைல் போன் பயங்கரமாக Lag ஆக ஆரம்பிக்கும் நண்பா. இதனைத் தவிர்த்து உங்களது மொபைலின் செயல்திறனை எப்போதும் ஸ்மூத்தாக வைத்திருக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். நீங்கள் தற்போது வேலை செய்யாத மற்ற லேயர்களை தற்காலிகமாக அங்கே இருக்கும் கண் ஐகானை (Eye Icon) கிளிக் செய்து Hide பண்ணி வையுங்கள், இது லேக் ஆகுறதை மொத்தமாகக் குறைக்கும்.
மேலும், டைம்லைனில் இருக்கும் பல லேயர்களை Long Press செய்து செலக்ட் பண்ணி, மேலே இருக்கும் ஆப்ஷன் மூலம் அவற்றை ஒரே குரூப்பாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் சேர்த்து, கேப்கட்டில் பண்ண முடியாத பல அட்வான்ஸ்டு பிளெண்டிங் மற்றும் மாஸ்கிங் டூல்ஸ்கள் இதில் இருக்கின்றன. இரண்டு லேயர்களை ஒன்றாக இணைத்து முகமூடி அமைப்பிற்குள் லாக் செய்யும் போது, விசுவல்ஸ் பார்க்க பிரீமியம் லுக்கைக் கொடுக்கும் நண்பா.
முடிவுரை மற்றும் எக்ஸ்போர்ட் ஆப்டிமைசேஷன்
கேப்கட்டில் இருந்து அலைட் மோஷனுக்கு மாறுவது என்பது ஆரம்பத்தில் ஒரு மாதம் கொஞ்சம் கஷ்டமாகத் தோன்றினாலும், நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது அது மிகவும் எளிதாகிவிடும். எல்லா எடிட்டிங்கும் முடிந்ததும், எக்ஸ்போர்ட் செய்வதற்கு முன்னாடி வீடியோவை ஒருவாட்டி நல்லா Preview பார்த்துக்கோங்க. வீடியோ ரெசல்யூஷனை 1080p Full HD அல்லது 4K-விலும், பிரேம் ரேட்டை 60fps-லும், பிட்ரேட்டை 'High'-லும் வச்சு எக்ஸ்போர்ட் பண்ணுங்க நண்பா. இது சோசியல் மீடியாவில் அப்லோடு பண்ணிய பிறகும் உங்களது வீடியோவின் ஷார்ப்னஸ் மற்றும் மோஷன் ஸ்மூத்னஸ் குறையாமல் வச்சுக்க உதவும்.
இந்த டூடோரியல்ல உங்களுக்கு ஏதாச்சும் சந்தேகம் இருந்தாலோ, இல்ல டைம்லைன்ல ஸ்பிளிட் டூல் அல்லது கீபிரேம் கிராஃப் வைக்க வரலனாலோ கவலைப்படாம கீழ இருக்குற Comment Section-ல கேளுங்க நண்பா, நான் உங்களுக்கு உடனே ரிப்ளை பண்ணி Help பண்றேன்.



